நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி (நதக) இடையேயான சமூக வலைதள மோதல் தீவிரமடைந்து வருகிறது. நதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் திரள்நிதி (Crowdfunding) முறை குறித்து தவெக நிர்வாகிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், “தவெக தலைவர் விஜய் படங்கள் ப்ளாக் விகிதத்தில் (Black Ticket) விற்பனை செய்யப்பட்டதா? லாட்டரி விற்பனை மூலம் வசூல் செய்ததா?” என்று பதில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், “அரசியல் என்பது ஆடம்பரமற்றதாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிக்கையில், “அரசியலில் ஆடம்பரம் கூடாது என்று அறிஞர் அண்ணா அறிவுறுத்தினார். ஆனால், இன்று சில கட்சிகள் அரசியலை தனியார் நிறுவனமாக மாற்றியிருக்கின்றன. தேர்தல் வியூக ஆலோசகர்களை வைத்து அரசியலை நடத்தும் முறை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது,” என்று கூறியுள்ளார்.
“சீமான் பொதுவாக ‘பணக்கொழுப்பு’ என்று விமர்சித்துள்ளார். ஆனால், அந்த விமர்சனம் எல்லா கட்சிகளையும் குறிக்கின்றது. தவெக மட்டும் ஏன் அதற்கு இப்படி எதிராக வருகிறதோ தெரியவில்லை,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபாடு செய்ய ஏதுவாக, வழியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கையை வைத்தபோது, தவெக தலைவர்கள் மௌனமாக இருந்தனர், ஆனால், பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்குப் பதில் சொல்ல வந்துவிட்டனர் என்பதே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் குற்றச்சாட்டு.
நாம் தமிழர் கட்சி, “திரள்நிதி என்பது மக்களின் நன்கொடை, அரசியல் இயக்கங்களை நம்பும் மக்களால் தரப்படும் நிதி” என்று வலியுறுத்துகிறது.
“பன்னாட்டு நிறுவனங்களிடமும் தனியார் முதலாளிகளிடமும் நிதி கேட்பதை தவிர, மக்களிடமிருந்து அரசியல் இயக்கம் நிதி பெறுவது தவறு இல்லை. திராவிட இயக்கங்கள், கம்யூனிச இயக்கங்கள், பல அமைப்புகள் இந்த முறையிலேயே கட்டமைக்கப்பட்டன. ஆனால், விஜய்யின் கட்சி மக்களிடம் நிதி சேகரிக்குமா? அல்லது ப்ளாக் டிக்கெட், லாட்டரி, விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பணம் சம்பாதிக்குமா?” என நதக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், “லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டங்களில் பணம் சம்பாதிப்பதும், திரைப்பட டிக்கெட்டை பல மடங்கு உயர்த்தி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை விஜய் அவர்களுக்கும், அவரது கட்சி உறுப்பினர்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறோம்,” என்று தவெக மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இரு கட்சிகளுக்குமிடையேயான சமூக வலைதள மோதல், தமிழக அரசியலில் விடாமல் தொடரும் சண்டையாக மாறியுள்ளது.

தமிழகம்
“விஜயின் தவெக Vs சீமானின் நாம் தமிழர் – திரள்நிதி சர்ச்சையில் சமூக வலைதள போர் தீவிரம்!”
“விஜயின் தவெக Vs சீமானின் நாம் தமிழர் – திரள்நிதி சர்ச்சையில் சமூக வலைதள போர் தீவிரம்!”
- February 13, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this