பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து, மத்திய அரசின் டங்க்ஸ்டன் ஏலம், திமுக அரசு, சட்டம் ஒழுங்கு மற்றும் வேங்கவயல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்து வெளியிட்டார்.
அரிட்டாபட்டி பகுதியில் உள்ள 4,980 ஏக்கர் பல்லுயிர் பாதுகாப்பு தளம் மத்திய அரசால் ஏலத்திற்கு விடப்பட்ட விவகாரம் குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு இந்த ஏலம் அறிவிக்க முடியாது என்று குற்றம்சாட்டினார். கிராம மக்கள் கண்டனம் தெரிவித்த உடனே, ஜனவரி 23, 2025 அன்று மத்திய அரசு திட்டத்தை முழுமையாக ரத்து செய்ததாக குறிப்பிட்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
உக்ரைன்-ரஷ்யா போரையும் பார்த்து பயப்படாத பிரதமர் மோடி, திமுக அரசை பார்த்து பயப்படுவாரா? என்று கேட்டார். மக்கள் கேட்டால் மட்டுமே மத்திய அரசு எந்த ஒரு தீர்மானத்தையும் மாற்றும். மத்திய அரசு யாருக்கும் பயந்து எந்த முடிவையும் எடுக்காது எனக் கூறினார். தீர்மானம் மாற்றுவது திமுக அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது என்றும் தாக்குரையாற்றினார்.
வேங்கவயல் விவகாரத்தில் யார் இந்த ‘சார்’? முதலில் அந்த பெயரை சொல்லுங்கள் எனக் கேட்டார். ஞானசேகரனின் மொபைல் கால் ரெக்கார்டு என்னிடம் உள்ளது. ஜனவரி 23, 24 தேதிகளில் யாரை தொடர்பு கொண்டார் என்பதும் எனக்குத் தெரியும் என்று கூறினார். சில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா வேலையும் அண்ணாமலையே செய்ய முடியாது. நான் மோப்பநாய் கிடையாது என்றும் சாடினார். சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி கொடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது? என்று நேரடியாக மாநில அரசை விமர்சித்தார்.
டங்க்ஸ்டன் ஏலம் தொடர்பாக மாநில அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் எப்போது? முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? வேங்கவயல் விவகாரத்தில் ‘சார்’ யார்? யாருக்கு காவல்துறை ஆதரவு? சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு ஏன் மறுக்கிறது? என அண்ணாமலை அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினார்.
அண்ணாமலையின் இந்த கடும் விமர்சனங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உலகம்
மதுரை
“மோடி ரஷ்யாவை பார்த்துக் கூட பயப்படவில்லை – திமுக அரசை பார்த்து பயப்படுவாரா?” – அண்ணாமலை தாக்கு..!
“மோடி ரஷ்யாவை பார்த்துக் கூட பயப்படவில்லை – திமுக அரசை பார்த்து பயப்படுவாரா?” – அண்ணாமலை தாக்கு..!
- January 31, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this