திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியில், எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும் போது தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் தனது எலக்ட்ரிக் பைக்கை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றிருந்தார்.
சென்ற சிறிது நேரத்திலேயே பைக்கில் திடீரென தீப்பற்றியது. தீயை அணைக்கும் முன்பே, பைக் திடீரென வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உடனே சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த சம்பவம் எலக்ட்ரிக் பைக்குகளின் சார்ஜிங் பாதுகாப்பு குறித்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Uncategorized
சார்ஜ் செய்யும் போது தீப்பற்றிய “எலக்ட்ரிக் பைக்” திடீரென வெடிப்பு!
சார்ஜ் செய்யும் போது தீப்பற்றிய “எலக்ட்ரிக் பைக்” திடீரென வெடிப்பு!
- November 11, 2024
- 0 Comments

Related Post

Leave feedback about this