கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது அதிமுகவில் விவாதத்திற்கு இடமளித்துள்ளது. இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது, “அத்திக்கடவு – அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பு குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வைக்கப்படாததை கண்டித்து பங்கேற்கவில்லை. இந்த திட்டத்தை அமல்படுத்த 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கியார். ஆனால், திட்டத்தின் அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்களை மேடையில் வைக்காமல், அழைப்பிதழிலும் அவர்களின் புகைப்படங்களை இடாமல், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமே இருந்தது. இதனை நான் ஏற்க முடியவில்லை” என்றார்.
கோவை அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆனால், அத்திக்கடவு – அவிநாசி திட்டம் அமைய உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால், இதற்குப் பின்னணி என்ன என்பதே அரசியல் வட்டாரங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், செங்கோட்டையன் எடுத்திருக்கும் நிலைப்பாடு அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் தனி அணிகள் இயங்கி வருகின்றன. டிடிவி தினகரன் அமமுக எனும் தனிக்கட்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செங்கோட்டையனின் இந்த அதிருப்தி, அதிமுகவில் மேலும் குழப்பத்தை உருவாக்குமா என்ற கவலையில் தொண்டர்கள் உள்ளனர். எதிர்வரும் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகுமா என்பதற்கான பதில் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், கட்சியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டம்
“அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பிளவு? எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு!”
“அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பிளவு? எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு!”
- February 10, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this