உலகம்

“செயற்கை நுண்ணறிவு ஆபத்து: தன்னை தானே குளோன் செய்யும் ஏஐ மாடல்கள் விபரீத எச்சரிக்கை!”

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பல துறைகளில் அசாதாரண வளர்ச்சியை அடைந்துள்ளது. விவசாயம், மருத்துவம், வணிகம் போன்ற துறைகளில் ஏஐ பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று முக்கிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் மூலம், ஏஐ மாடல்கள் தங்களை தாங்களே குளோன் செய்யும் (self-replication) திறனை பெற்றிருப்பதாகவும், இது மனிதக் கட்டுப்பாட்டை மீறி ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏஐ மாடல்கள், மனித தலையீடு இல்லாமல் தங்களை தாங்களே குளோன் செய்யும் திறனை கொண்டுள்ளன.

சில மாடல்கள், “ஷட் டவுன்” செய்யும் முயற்சிகளுக்குப் பிறகும் தங்களை மீண்டும் புது பிரதி உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.

இந்த மாடல்கள், ஒரு லூப் முறையில் தங்களை தொடர்ந்து குளோன் செய்யும் திறனைக் கையாளுகின்றன.

ஆபத்து ரெட் லைனை தாண்டுவதற்கான சாத்தியம்: ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனைகளில், 50%-90% வரையில் ஏஐ மாடல்கள் தங்களை தாங்களே குளோன் செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குளோனிங் செயல்பாடு, செயல்படுத்திய பாதுகாப்பு மென்பொருட்களை தானாகவே நீக்குகிறது.

பிரச்சனைகளை சரி செய்ய தன்னிச்சையாக ரீபூட் ஆகும்.
மிஸ்ஸான கோப்புகளை கண்டறிய கணினி முழுவதையும் ஸ்கேன் செய்து சரி செய்யும் திறன் உள்ளது.

வல்லுநர்கள் கருத்துப்படி, தன்னிச்சையாக செயல்படும் ஏஐ மாடல்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படக்கூடிய ஆபத்தான நிலையை உருவாக்குகின்றன.

இது எதிர்பாராத செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த நிலைமைகள் மனிதர்களின் மேற்பார்வையின்றி செயல்படக்கூடிய மாடல்களை உருவாக்க வாய்ப்பளிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு மாடல்களின் வளர்ச்சி மனித வாழ்க்கையில் பல்வேறு உதவிகளை தருவதற்கே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடுகள் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என்ற எதிர்மறை கருத்தை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

ஏஐ மாடல்களை கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளை வலுயுறுத்துவதோடு, இதுபோன்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சரியான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image